​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்பார் - உதயநிதி ஸ்டாலின்

Published : Jan 21, 2020 4:52 PM

ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்பார் - உதயநிதி ஸ்டாலின்

Jan 21, 2020 4:52 PM

பெரியார் நடத்திய ஊர்வலம் தொடர்பாக, உண்மை தெரிந்த பிறகு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்பார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செயற்குழு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் 1971ம் ஆண்டு நடைபெற்ற ஊர்வலம் குறித்து தெரியாமல் பேசுவதாக கூறினார்.

மேலும் முன்பொருமுறை காவிரி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினி, உண்மை தெரிந்த பின்னர் அதற்காக மன்னிப்புக் கேட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.