​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தோள்பட்டை காயம் காரணமாக தவான் நியூசி., தொடரிலிருந்து விலகல்

Published : Jan 21, 2020 4:05 PM

தோள்பட்டை காயம் காரணமாக தவான் நியூசி., தொடரிலிருந்து விலகல்

Jan 21, 2020 4:05 PM

தோள்பட்டை காயம் காரணமாக இந்திய வீரர் ஷிகர் தவான், நியூசிலாந்து அணிக்கு எதிரான டீ ட்வெண்டி தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பெங்களுரூவில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில், பீல்டிங் செய்யும்போது தவானிற்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் நியூசிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டீ ட்வெண்டி தொடர் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.

இதில் பங்கேற்பதற்கான இந்திய அணி நியூசிலாந்திற்கு புறப்பட்ட நிலையில், அதில்  தவான் இடம்பெறவில்லை.  தவான் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என பிசிசிஐ தரப்பில் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.