​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

Published : Jan 21, 2020 3:37 PM

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

Jan 21, 2020 3:37 PM

மகரவிளக்கு பூஜை சீசனுக்குப் பிறகு சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோயில் நடை இன்று அடைக்கப்பட்டது. 

மகரவிளக்கு காலம் கடந்த 15 ஆம் தேதி முடிவுற்றாலும், பக்தர்களின் வருகைக்காக ஐயப்பனின் சன்னிதானம் நேற்று மாலை வரை திறந்து வைக்கப்பட்டது.

இன்று அதிகாலை, தந்திரி மகேஷ் மோகனரரு தலைமையில் ஸ்ரீஐயப்பனுக்கு அஷ்டதிரவிய மகாகணபதி ஹோமம், அபிஷேகம், அதிகாலை நைவேத்தியம் ஆகிய பாரம்பரிய பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து  ஹரிவாராசனம் பாடப்பட்டு நடை சாத்தப்பட்டது. பின்னர்,  ஸ்ரீஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த திருஆபரணங்கள், பந்தளம் அரண்மனை பிரதிநிதி தலைமையில், ஊர்வலமாக பந்தளம் அரண்மனைக்கு திருப்பி எடுத்துச் செல்லப்பட்டது.

இனி மாதாந்திர பூஜைக்காக வரும் 13 ஆம் தேதி சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோயில் திறக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்திற்காக 5 நாட்கள் திறந்து வைக்கப்படும்.