​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகர்கோவில் விரைவு ரயிலில் மிடில் பெர்த் கழன்று விபத்து

Published : Jan 21, 2020 12:57 PM

நாகர்கோவில் விரைவு ரயிலில் மிடில் பெர்த் கழன்று விபத்து

Jan 21, 2020 12:57 PM

விரைவு ரயிலில் மிடில் பெர்த் கழன்று விழுந்ததில் லோயர் பர்த்தில் உறங்கிய 70 வயது முதியவர் காயத்துடன் உயிர் தப்பினார்.

நேற்று இரவு சென்னை தாம்பத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்ட விரைவு ரயிலின் எஸ்10 பெட்டியின் லோயர்பெர்த் ஒன்றில் தர்மராஜ் என்பவர் பயணம் செய்தார்.

நள்ளிரவில் தர்மராஜ் உறங்கிய பெர்த்துக்கு மேல் இருந்த மிடில் பெர்த் திடீரென கழன்று அந்த பெர்த்தும், அதில் உறங்கிய பயணியும் தர்மராஜ் மீது விழுந்தனர்.

சகபயணிகள் தர்மராஜ் உள்ளிட்ட இருவரையும் மீட்டனர். மதுரை ரயில் நிலைய ஊழியர்கள் பெர்த்தை சரிசெய்ய முயன்றதாகவும், அதனை சரி செய்ய இயலவில்லை என்றும் கூறப்படுகிறது.

தர்மராஜுக்கு முதலுதவி அளிக்கவும் எவரும் இல்லை என புகார் எழுந்துள்ள நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து அந்த ரயில் அரை மணி நேர கால தாமதத்துக்கு பிறகு புறப்பட்டு சென்றது.