​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

Published : Jan 21, 2020 11:59 AM

மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

Jan 21, 2020 11:59 AM

மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டதன் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவை ஒட்டி அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று மங்களூர் விமான நிலையத்தில் இரு இடங்களில் வெடிகுண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டன. அதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடியரசு தினவிழாவை ஒட்டி 5 அடுக்கு பாதுகாப்பில் இருந்த மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் செல்ல தற்காலிகமாக தடையும் விதிக்கப்பட்டுள்ளது.