​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கவிழ்ந்து கிடந்த லாரி மீது டெம்போ டிராவலர் வேன் மோதியதில் 8 பேர் படுகாயம்

Published : Jan 21, 2020 11:07 AM

கவிழ்ந்து கிடந்த லாரி மீது டெம்போ டிராவலர் வேன் மோதியதில் 8 பேர் படுகாயம்

Jan 21, 2020 11:07 AM

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஏற்கனவே விபத்துக்குள்ளான லாரி மீது டெம்போ டிராவலர் வேன் மோதியதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

புதுச்சேரியில் இருந்து ஆந்திராவுக்கு கொசு அடிக்கும் பேட்கள் ஏற்றிச் சென்ற லாரி, நேற்று நள்ளிரவு எச்சூர் என்ற இடத்தில் சிறு பாலம் மீது மோதி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த நிலையில்  கிருஷ்ணகிரி மாவட்டம் தல்சூரில் இருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற டெம்பா டிராவலர், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏற்கனவே விபத்துக்குள்ளான லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.

அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் டெம்போ டிராவலரில் பயணம் செய்த 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.