​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சூரத்திலுள்ள ஜவுளி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

Published : Jan 21, 2020 10:07 AM

சூரத்திலுள்ள ஜவுளி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

Jan 21, 2020 10:07 AM

குஜராத் மாநிலம் சூரத்திலுள்ள 10 மாடிகள் கொண்ட ஜவுளி வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

ரகுவீர் எனும் அந்த வணிக வளாகம் இயங்கி வந்த 10 தளங்களை கொண்ட அடுக்குமாடிக் கட்டடத்தில் அதிகாலையில் தரைதளத்தில் இருந்த கடை ஒன்றில் தீ பற்றியுள்ளது. தீயானது அடுத்தடுத்தக் கடைகளுக்கும், அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியதில் மொத்த கட்டிடமும் கொழுந்து விட்டு எரிந்து தீப்பிழம்பாக காட்சியளித்தது. அங்குள்ள கடைகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பாலிஸ்டர் ரக துணிகள் அதிக அளவில் இருந்ததால் தீ வேகமாக பரவியுள்ளது.

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் 57 தீயணைப்பு வாகனங்களுடன் வந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சில தீயணைப்பு வாகனங்களும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. கடந்த 8ம் தேதி தான் இதே கட்டிடத்தின் 4வது தளத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது முறையான தீத்தடுப்பு உபகரணங்கள் இல்லாததற்காக அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.