​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆடவர் பிரிவில் நோவக் ஜோகோவிச், இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

Published : Jan 21, 2020 9:25 AM

ஆடவர் பிரிவில் நோவக் ஜோகோவிச், இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

Jan 21, 2020 9:25 AM

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் நோவக் ஜோகோவிச், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இப்போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில், ஜெர்மன் வீரர் ஜேன் - லென்னர்ட் ஸ்ட்ர்பை (Jan-Lennard Struff) முதல்சுற்றில் எதிர்கொண்ட ஜோகோவிச் 7-6, 6-2, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற நயோமி ஓசாகா ((Naomi Osaka)) பராகுவே நாட்டை சேர்ந்த கீச் மேரி போஸ்கோவாவை ((Czech Marie Bouzkova)) 6க்கு2, 6க்கு4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.

அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், தன்னை எதிர்த்து விளையாடிய ரஷ்ய வீராங்கனை அனஸ்தாஸ்யாவை ((Anastasia)) 6 க்கு 0, 6க்கு 3 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.