​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம்

Published : Jan 21, 2020 7:25 AM

இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம்

Jan 21, 2020 7:25 AM

தி.மு.க. தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணியளவில் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் பொதுச்செயலாளர் க.அன்பழகன் விடுத்திருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மற்றும் காங்கிரஸ் மீதான விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கிடையே திமுகவின் தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.