​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்..! பயணிகள் கடும் அவதி

Published : Jan 21, 2020 7:09 AM

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்..! பயணிகள் கடும் அவதி

Jan 21, 2020 7:09 AM

நெல்லையில் இருந்து சென்னை வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதிக்காளாகினர்.

வழக்கமாக இந்த ரயில் இரவு 7-45  மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 6-55 மணிக்கு  எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடையும். நேற்றிரவு ரயிலை இயக்க வந்த ஓட்டுனர் என்ஜினில் கோளாறு இருப்பதை கண்டறிந்தார்.

உடனடியாக பல்வேறு தொழில் நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு இன்ஜினை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு ஒன்றேகால் மணி நேரம் தாமதமாக இரவு 9 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டது.