​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் வெடிகுண்டு

Published : Jan 20, 2020 7:45 PM

விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் வெடிகுண்டு

Jan 20, 2020 7:45 PM

கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. அந்த விமான நிலைய வளாகத்தில் கருப்பு நிற பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது.

உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தபோது, அதற்குள் LED எனப்படும் சிறிய ரக வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த வெடிகுண்டு பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வெடிக்கவைத்து அழிக்கப்பட்டது.

இதனிடையே விமான நிலையத்திலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, தொப்பி அணிந்து ஆட்டோ ஒன்றில் வரும் மர்ம நபர் ஒருவன் அந்தப் பையை அங்கு வைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.