​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

Published : Jan 20, 2020 7:32 PM

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

Jan 20, 2020 7:32 PM

தமிழ்நாட்டில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த, மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டியது அவசியமில்லை என்ற மத்திய அரசின் உத்தரவை, திரும்ப வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் துறை அறிக்கை அனுப்பும் முன் தமிழ்நாடு அரசிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பெரும்பாலான ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தமிழகத்தின் நெற் களஞ்சியமான காவிரி டெல்டா பகுதியிலேயே அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிப்பதால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டாம் என்றும்,  முதலமைச்சர் வலியுறுத்திஉள்ளார்.