​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அலுவலகம் வரை வந்தும் வேட்புமனுத்தாக்கல் செய்வதை கோட்டை விட்ட கெஜ்ரிவால்

Published : Jan 20, 2020 7:17 PM

அலுவலகம் வரை வந்தும் வேட்புமனுத்தாக்கல் செய்வதை கோட்டை விட்ட கெஜ்ரிவால்

Jan 20, 2020 7:17 PM

தொண்டர்கள் புடை சூழ நீண்ட நேரமாக ஊர்வலமாக சென்றதால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடுவோர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை இறுதி நாளாகும்.

இந்நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால், வேட்பு மனு தாக்கல் செய்ய பேரணியாக சென்றார். டெல்லி வால்மீகி கோவிலில் இருந்து அனுமான் கோவில் வரை அவர் தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக சென்றார்.

ஊர்வலம் மிக மெதுவாக சென்றதால், மாலை 3 மணிக்கு பின்னரே வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்தை அடைய அவரால் முடிந்தது. அலுவலகம் மூடப்பட்டதால் வேட்பு மனுத்தாக்கல் செய்யாமலேயே கெஜ்ரிவால் திரும்பிச் சென்றார்.