​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட 7 மாத ஆண் குழந்தை மீட்பு - பெண் கைது

Published : Jan 20, 2020 6:59 PM

சென்னை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட 7 மாத ஆண் குழந்தை மீட்பு - பெண் கைது

Jan 20, 2020 6:59 PM

சென்னையில், அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட 7 மாத குழந்தை மீட்கப்பட்டுள்ளது. .

கடந்த 12ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், பலூன் விற்பனை செய்யும் ஏழை பெற்றோரின் கவனத்தை திசைத் திருப்பி, 7 மாத ஆண் குழந்தையை, இளம்பெண் ஒருவர் கடத்திச் சென்றார்.

பூக்கடை துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதில் ஒரு தனிப்படையினர், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, குழந்தையை தூக்கி வந்த இளம்பெண்ணை மடக்கி, குழந்தையை மீட்ட போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், குழந்தையை கடத்தியவர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரேவதி என்பது தெரியவந்துள்ளது.