​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கார் பரிசளிப்பு

Published : Jan 20, 2020 6:37 PM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கார் பரிசளிப்பு

Jan 20, 2020 6:37 PM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்ற வீரர் மற்றும் காளையின் உரிமையாளருக்கு கார்களை பரிசாக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் வழங்கினர்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 17ம் தேதி நடைபெற்றது. இதில், 16 காளைகளைப் பிடித்து ரஞ்சித் என்ற வீரர் வெற்றிபெற்றார்.

கருப்பு என்ற காளை, சிறந்த காளையாக தேர்வானது. தேர்வு பெற்ற ரஞ்சித், சிறந்த காளையின் உரிமையாளர் மார்நாடு ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், ஹுண்டாய் சான்ட்ரோ கார்களை பரிசாக வழங்கி வாழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.