​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நியூசிலாந்து தொடரையும் இந்திய அணி வெல்லும் - விராட் கோலி நம்பிக்கை

Published : Jan 20, 2020 6:03 PM

நியூசிலாந்து தொடரையும் இந்திய அணி வெல்லும் - விராட் கோலி நம்பிக்கை

Jan 20, 2020 6:03 PM

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் பந்தில் இருந்தே இந்திய அணி வலிமையை காட்டும் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

image

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டம் அழகாக இருந்தது என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்ற அவர், அடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு இந்திய அணி தயாராக உள்ளது என்றார்.

image

ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றுவதில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் கிடைக்கிறார் என்றும் இதனால் அணி வீரர்களில் மாற்றம் செய்வதற்கான காரணம் எதுவுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரையும் இந்திய அணி வெல்லும் என கோலி தெரிவித்தார்.