​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

Published : Jan 20, 2020 5:27 PM

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

Jan 20, 2020 5:27 PM

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் தலைமையில் நடத்தப்பட்ட விவசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்றகோரி ஜனவரி 17ஆம் தேதி முதல், 23ஆம் தேதி வரை, சென்னை மெரினா உட்பட தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த போராட்டம் முடிவுற்ற நாளில், வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.

மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விசாரணையில், 1951 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இன்று வழங்கியுள்ளார்.