​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்து கோலி, ரோகித் அசத்தல்..!

Published : Jan 20, 2020 4:40 PM

ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்து கோலி, ரோகித் அசத்தல்..!

Jan 20, 2020 4:40 PM

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில், இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா முதல் இரு இடங்களை பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. இந்நிலையில், பேட்ஸ்மேன்களுக்காக தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற கோலி, 886 புள்ளிகளுடன் இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இறுதி போட்டியில் சதம் அடித்து அசத்திய ரோகித் சர்மா, 868 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். அணிகளுக்கான தர வரிசையில் இந்தியா 2ஆவது இடத்திலும் இங்கிலாந்து முதலிடத்திலும் உள்ளன.

Also Read : இரக்கம் இல்லையா உனக்கு.. காட்டடி அடிக்கிறாயே.! ரோஹித் சர்மாவை புகழ்ந்த சோயிப் அக்தர்

Watch Polimernews Online ON : https://bit.ly/35lSHIO