தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அதற்கான விண்ணப்ப பதிவும் ஆன்லைனில் தொடங்கியது.
காவல்துறை துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு நிலை பதவிகளில் உள்ள, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டது.
இதையடுத்து தேர்வர்கள் இன்று முதல் பிப்ரவரி 19-ம் தேதி வரை ஆன்லைன் www.tnpsc.gov.in மூலம் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த கூடுதல் விவரங்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதளங்களில் இடம்பெற்றுள்ளன. குரூப்-1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Watch Polimernews Online : https://bit.ly/35lSHIO