​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமநாதபுரத்தில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கக் கோரிய வழக்கு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

Published : Jan 20, 2020 1:33 PM

ராமநாதபுரத்தில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கக் கோரிய வழக்கு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

Jan 20, 2020 1:33 PM

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலமனுவில், அம்மாவட்டத்தில் போதிய மழை பெய்து நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது என்றும் ஆனால் அவற்றை விற்பனை செய்ய ஒரேயொரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மட்டுமே உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றனர் என்றும் எனவே முதுகுளத்தூர், எம்-தூரி, செல்வநாயகபுரம் விலக்கு ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க உத்தரவிடுமாறும் கோரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.