​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈராக் போராட்டத்தில் கலவரம் மூண்டதால் போர்களமாக காட்சியளித்தது

Published : Jan 20, 2020 1:33 PM

ஈராக் போராட்டத்தில் கலவரம் மூண்டதால் போர்களமாக காட்சியளித்தது

Jan 20, 2020 1:33 PM

அரசுக்கு எதிராக ஈராக்கின் பல இடங்களில் நடந்த போராட்டத்தில் கலவரம் மூண்டது.

புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும், அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈராக்கில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பாக்தாத்தில் நேற்று போராட்டக்காரர்கள் முக்கிய வீதிகளில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் மூண்டதால் போர்களமாக மாறியது.

அதே போல் நஜாப்பில், ஈரானின் முன்னாள் ஜெனரல் காசிம் சோலைமானியின் படங்களை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். அல்-திவானியா, சுமாரியா மற்றும் வாசித் ஆகிய இடங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.