​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நியூஸி. தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவன் இடம்பெறுவாரா ?

Published : Jan 20, 2020 12:34 PM

நியூஸி. தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவன் இடம்பெறுவாரா ?

Jan 20, 2020 12:34 PM

இந்திய கிரிக்கெட் அணி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் தோள்பட்டை காயத்தால் அவதிப்படுவதால், நியூசிலாந்து போட்டித் தொடருக்கான அணியில் அவர் இடம்பெறுவதில் சந்தேகம் நிலவுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதல் 2 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக அவர் விளையாடினார்.

imageஅதில் முதல் ஒருநாள் போட்டியில் 74 ரன்களும், 2ஆவது போட்டியில் 96 ரன்களும் அவர் குவித்தார். பெங்களூரில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் அடித்த பந்தை பிடிக்க முயன்றபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதனால் பீல்டிங்கிலிருந்து பாதியில் வெளியேறிய அவர், பேட்டிங்கும் செய்யவில்லை. இதனால் 24ம் தேதி தொடங்கவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கும் அணியில் அவர் இடம்பெறுவதில் சந்தேகம் நிலவுகிறது.