​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் 10 பேர் கும்பலால் கடத்தப்பட்ட நபர் கோவளத்தில் சடலமாக மீட்பு

Published : Jan 20, 2020 11:59 AM

சென்னையில் 10 பேர் கும்பலால் கடத்தப்பட்ட நபர் கோவளத்தில் சடலமாக மீட்பு

Jan 20, 2020 11:59 AM

சென்னை ஐஸ்ஹவுஸ் நடேசன் சாலையில் 10 பேர்கொண்ட கும்பலால் கடத்தப்பட்ட ராம்குமார் என்பவர், கோவளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ராம்குமார் கடத்தப்பட்டது தொடர்பாக, ஐஸ்ஹவுஸ் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தநிலையில், கோவலம், கடலோரக் காவல் படை நிலையத்தின் பின்புறம் உள்ள கல்குட்டையில் சடலம் ஒன்று கிடப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, சென்னையில் கடத்தப்பட்ட ராம்குமாரின் உடல் என்பது தெரியவந்தது. உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன.

இதையடுத்து, உடலை, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டைக்கு அனுப்பிவைத்த போலீசார் கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.