​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐ.சி.யுவில் இருந்தாலும் நடிகை சபானா ஆஸ்மி நலமாகவே உள்ளார்- ஜாவேத் அக்தர்

Published : Jan 20, 2020 11:48 AM

ஐ.சி.யுவில் இருந்தாலும் நடிகை சபானா ஆஸ்மி நலமாகவே உள்ளார்- ஜாவேத் அக்தர்

Jan 20, 2020 11:48 AM

விபத்தில் படுகாயமடைந்த பிரபல நடிகை சபானா ஆஸ்மி, தற்போது நல்ல உடல் நிலையுடன் உள்ளதாக அவரது கணவரும், பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு இருவரும் பயணம் மேற்கொண்டபோது இவர்கள் சென்ற கார், முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நடிகை சபானா ஆஸ்மி பலத்த காயமடைந்தார். ஜாவேத் அக்தர் காயமின்றி தப்பினார்.

இந்நிலையில், சபானா ஆஸ்மியின் உடல்நலம் குறித்து தெரிவித்த ஜாவேத் அக்தர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும், அவர் உடல்நிலை நன்றாக உள்ளதாக குறிப்பிட்டார். மருத்துவ அறிக்கைகளை பார்க்கும்போது அதில் கவலைப்படும்படியான பிரச்சினைகள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Also Read : நடிகை ஷபனா ஆஸ்மியின் கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு