​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருத்துவர் வீட்டில் 50 சவரன் நகை, ரூ. 3 லட்சம் பணம் திருட்டு

Published : Jan 20, 2020 11:45 AM

மருத்துவர் வீட்டில் 50 சவரன் நகை, ரூ. 3 லட்சம் பணம் திருட்டு

Jan 20, 2020 11:45 AM

வேலூர் மாவட்டம் காட்பாடியில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காட்பாடி பாரதிநகர் பகுதியில் வசித்து வரும் ரமணய்யா, குடியாத்தம் சாலையில் சாந்தி கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை குடும்பத்துடன் அவர் வெளியூர் சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவிலிருந்த 50 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

பீரோ இருந்த அறையில் மிளகாய்ப் பொடியையும் அவர்கள் தூவிச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.