​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாக்பூரில் கிரிக்கெட் விளையாடிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

Published : Jan 20, 2020 11:28 AM

நாக்பூரில் கிரிக்கெட் விளையாடிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

Jan 20, 2020 11:28 AM

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கிரிக்கெட் விளையாடி அனைவரையும் அசத்தினார்.

நாக்பூரில் நீதிபதிகள், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இடையே 15 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவும் கலந்து கொண்டு விளையாடினார். தேர்ந்த கிரிக்கெட் வீரரை போல அவர் பேட்டிங் செய்தும் அசத்தினார்.

அப்போட்டியில் பாப்டே மொத்தம் 15 ரன்கள் குவித்தார். போட்டியில் விளையாடிய மற்றவர்கள் எடுத்த தனிப்பட்ட ஸ்கோரை விட பாப்டேவின் ஸ்கோரே அதிகமாகும். இருப்பினும் எதிரணியினரான வழக்கறிஞர்கள் அணியே போட்டியில் வெற்றி பெற்றது.

Also Read : நியூஸி. தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவன் இடம்பெறுவாரா ?