​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தன்னலமற்ற உழைப்பால் முதலமைச்சர் பதவிக்கு வந்தேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published : Jan 20, 2020 11:20 AM

தன்னலமற்ற உழைப்பால் முதலமைச்சர் பதவிக்கு வந்தேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Jan 20, 2020 11:20 AM

ஜெயலலிதா பேரையில் தான் இருந்த போதும், தற்போதும் தன்னலமற்று உழைத்ததாகவும், அதனால் தான் இந்த பதவிக்கு வந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அரசின் திட்டங்களை கிராமம் முதல் நகரங்கள் வரை மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளரான அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.