​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கைக்கு இந்தியா ரூ.360 கோடி நிதி உதவி

Published : Jan 20, 2020 10:14 AM

இலங்கைக்கு இந்தியா ரூ.360 கோடி நிதி உதவி

Jan 20, 2020 10:14 AM

இலங்கைக்கு ஆயுதங்கள் வாங்க இந்தியா ரூ.360 கோடி நிதி உதவி வழங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவு மேம்பாடு, தேச பாதுகாப்பு, உளவு தகவல் பரிமாற்றம், கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து இதில் விவாதித்தனர்.

இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்கள் வாங்க இந்திய தரப்பிலிருந்து 360 கோடி ரூபாய் வழங்கப்படும் என உறுதி அளித்த அஜித் தோவல், உளவு தகவல்களை சேகரிப்பது தொடர்பான தொழில்நுட்பத்தையும் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இந்தியா, இலங்கை, மாலத்தீவு, அடங்கிய கடல்சார் மண்டலம் தொடர்பான உளவு தகவல்களை ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தையும் அஜித் தோவல் எடுத்துரைத்தார்.