​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொழிலதிபரின் இறுதிச்சடங்கில் தப்பும் தவறுமாக கவாத்து செய்த அதிகாரிகள்

Published : Jan 20, 2020 7:41 AM

தொழிலதிபரின் இறுதிச்சடங்கில் தப்பும் தவறுமாக கவாத்து செய்த அதிகாரிகள்

Jan 20, 2020 7:41 AM

தென் ஆப்பிரிக்காவில் முக்கியப் பிரமுகரின் இறுதிச் சடங்கின் போது அதிபருக்கு முன்பாகவே காவல்துறை உயரதிகாரிகள் குளறுபடியாக நடந்த கொண்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மிகப்பெரும் தொழில் முனைவோரான ரிச்சர்ட் மபொன்யா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா பங்கேற்றார்.

அரசு மரியாதையுடன் ரிச்சர்டின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்த காவல்துறையின் 4 உயரதிகாரிகள் கவாத்தின் போது, ஒரே பக்கமாகத் திரும்புவதற்கு பதிலாக மாற்றி மாற்றி குழப்பிக் கொண்டிருந்தனர். அதிபருக்கு முன்பாகவே அதிகாரிகள் தப்பும் தவறுமாக நடந்து கொண்ட சம்பம் அங்கு விவாதப் பொருளாக மாறியுள்ளது.