ஸ்பெயின் நாட்டில் வீசிய குளோரியா புயலால் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 150க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியைத் தாக்கிய குளோரியா புயலால் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாகமாவும் அப்பகுதியில் உள்ள மலைகள் காற்றின் வேகத்தை தடுத்ததால் ஏற்பட்ட குளிர்ச்சி காரணமாக கடுமையான பனிப்பொழிவும் ஏற்பட்டது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பனிப்பொழிவு காரணமாக வேலன்ஸியா மற்றும் கேட்டலன் பகுதி நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலைமை வரும் 22ம் தேதிவரை நீடிக்க வாய்ப்பிருப்பதாக அந்நாடு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.