​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக முதலமைச்சருக்கு குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டு

Published : Jan 19, 2020 7:21 PM

தமிழக முதலமைச்சருக்கு குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டு

Jan 19, 2020 7:21 PM

விவசாயியாக இருந்ததை மறக்காமல் இன்றளவும் விவசாயம் செய்யும் தமிழக முதலமைச்சரின் செயல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில், தன்னுடைய செயல்பாடுகள் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களை கவர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தி வருவதாக கூறியுள்ளார். இதனால் மக்கள் நிலையான விவசாயத்தை கையில் எடுத்து அதன்மேல் கவனத்தை செலுத்த வேண்டும் என்று வெங்கய்யா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆட்சி செயல்பாடுகள் மூலம் பல்வேறு விருதுகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று வந்த முதலமைச்சர், இப்போது தம்முடைய தனிப்பட்ட செயல்பாடுகள் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளார் என்பதற்கான சான்றாக இது அமைந்துள்ளது என்றும் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.