​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எல்லையில் சிக்னல் கோபுரங்கள், நவீன கேமராக்களை பாக்., ராணுவம் நிறுவல்

Published : Jan 19, 2020 5:00 PM

எல்லையில் சிக்னல் கோபுரங்கள், நவீன கேமராக்களை பாக்., ராணுவம் நிறுவல்

Jan 19, 2020 5:00 PM

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியிலுள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அருகே புதிதாக சிக்னல் கோபுரங்களையும், உயர்தொழில்நுட்ப கேமராக்களையும் பாகிஸ்தான் நிறுவியிருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

எல்லையில் இருக்கும் இந்திய கிராமங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இத்தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என்பதால், அதை எதிர்கொள்ள இதுவரை 18 சிக்னல் கோபுரங்களையும், நவீன கேமராக்களையும் பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ் அமைப்பும் நிறுவியிருப்பதாகவும், எல்லை நெடுகிலும் கன்னிவெடிகளை புதைக்கும்படி பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டிருப்பதாகவும் கிடைத்த தகவலின்படி, அரசுக்கு உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.