​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் இலவச மின்சாரம் - அரவிந்த் கெஜரிவால்

Published : Jan 19, 2020 4:21 PM

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் இலவச மின்சாரம் - அரவிந்த் கெஜரிவால்

Jan 19, 2020 4:21 PM

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அக்கட்சி அமைப்பாளரும் முதலமைச்சருமான அரவிந்த் கெஜரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், டெல்லியில் மீண்டும் ஆட்சியமைத்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செய்யும் பணிகள் குறித்த உத்தரவாதங்கள் அடங்கிய அட்டையை (Guarantee Card) கெஜரிவால் வெளியிட்டார். கெஜரிவாலின் 10 உதிர்வாதங்கள் என்ற பெயரில் இது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அவர், 24 மணி நேரம் தடையின்றி மின்சாரம், 200 யூனிட் இலவச மின்சாரம், வீடு தோறும் குழாயின் மூலம் குடிநீர் வழங்கப்படும் எனவும், தற்போது வழங்கப்படும் 20 ஆயிரம் லிட்டர் இலவச குடிநீர் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலவச சுகாதார வசதிகள், அடுத்த 5 ஆண்டுகளில் தேசிய தலைநகரில் 2 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டம் தொடரும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நிலத்தடி கேபிள் வழியாக மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

டெல்லியில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உலகத்தரம் வாய்ந்த கல்வி வசதி செய்து தரப்படும். புதிதாக 11,000 பேருந்துகள் போக்குவரத்துக்கு வசதிக்காக இயக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.