​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடுக்கடலில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகள் பறிமுதல் - மீனவர்கள் தப்பியோட்டம்

Published : Jan 19, 2020 3:59 PM

நடுக்கடலில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகள் பறிமுதல் - மீனவர்கள் தப்பியோட்டம்

Jan 19, 2020 3:59 PM

ராமேஸ்வரம் ஒட்டிய கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட  மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்த இந்திய கடற்படையினர், தப்பியோடிய மீனவர்களை தேடி வருகின்றனர்.

சர்வதேச கடல் எல்லையில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிப்பதாக வந்த தகவலையடுத்து இந்திய கடற்படை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் சிலர் விசைப்படகில்  மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும் அதிகாரிகளை கண்டதும்  வலைகளை கடலில் அறுந்தெறிந்து விட்டு தப்பியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வலைகளை பறிமுதல் செய்த கடற்படை அதிகாரிகள், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மீனவர்களை தேடி வருகின்றனர்.