​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய அணி வெற்றி..!

Published : Jan 19, 2020 1:32 PM

இந்திய அணி வெற்றி..!

Jan 19, 2020 1:32 PM

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்தியா, தொடரையும் கைப்பற்றியுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஸ்டீவன் ஸ்மித் நிலைத்து நின்று 131 ரன்களும், மார்னஸ் லபுசான் 54 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

287 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோஹித் சர்மா 119 ரன்களும், கோலி 89 ரன்களும் எடுத்ததால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இந்திய அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் அய்யர் 44 ரன்களுடனும் மணிஷ் பாண்டே 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.