​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
4 மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றிவளைத்து கைது

Published : Jan 19, 2020 12:10 PM

4 மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றிவளைத்து கைது

Jan 19, 2020 12:10 PM

புதுக்கோட்டை மாவட்டத்தைச்சேர்ந்த 4 மீனவர்கள், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர்.

அறந்தாங்கியை அடுத்த ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 96 விசைப்படகுகளில் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று அந்த பகுதிக்கு மின்னல் வேகத்தில் வந்தது. இதைப்பார்த்த பல மீனவர்கள் தங்களது வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப் படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் தங்கள் கடல் எல்லையில் மீன் பிடித்ததாக கூறி அவர்களை சிறைப்பிடித்தனர்.