​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பை அடைவது "கடினம்... ஆனால்.,முடியும்" - நிதின் கட்கரி

Published : Jan 18, 2020 8:15 PM

5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பை அடைவது "கடினம்... ஆனால்.,முடியும்" - நிதின் கட்கரி

Jan 18, 2020 8:15 PM

நாட்டின் பொருளாதார மதிப்பை, 2024ஆம் ஆண்டில், 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான இலக்கை அடைவது என்பது கடினமான காரியம் என்றும், ஆனால், அது முடியாத ஒன்று இல்லை என்றும், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியிருக்கிறார்.

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் பேசிய அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதன் மூலமும், இறக்குமதி பொருட்களை சார்ந்திருப்பதை முற்றாகத் தவிர்ப்பதனாலும் மட்டுமே, 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார மதிப்பு இலக்கை அடைவது சாத்தியப்படக் கூடும் என்றும் நிதின்கட்கரி கூறியிருக்கிறார்.

சிறு, குறு மற்றும் மத்திய ரக நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலம், 5 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்திருக்கிறார்.