​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரவக்குறிச்சி அருகே 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் சண்டை நிறைவு

Published : Jan 18, 2020 7:51 PM

அரவக்குறிச்சி அருகே 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் சண்டை நிறைவு

Jan 18, 2020 7:51 PM

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் கட்டு என அழைக்கப்படும் சேவல் சண்டை நிறைவுப்பெற்றது.

நாமக்கல், கோவை உள்ளிட அண்டை மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் சுமார் 25 ஆயிரம் சண்டை சேவல்கள் போட்டியில் களம் கண்டன.

கோச்சை என அழைக்கப்படும் போட்டியில் தோல்வியுற்ற சேவல்களை, வெற்றி பெற்ற சேவல் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விதியின் படி, கோச்சைகளை பெற்ற உரிமையாளர்கள் சிலர் அப்பகுதியிலே விற்பனையிலும் ஈடுபட்டனர்.