​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகை ஷபனா ஆஸ்மியின் கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு

Published : Jan 18, 2020 7:04 PM

நடிகை ஷபனா ஆஸ்மியின் கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு

Jan 18, 2020 7:04 PM

மும்பையில் கார் விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி காயம் அடைந்த நிலையில், காரை அதிவேகத்தில் இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக அவரின் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேற்று மும்பை - புனே விரைவுச் சாலையில் நடிகை ஷபனா ஆஸ்மியும், அவரது கணவரும் காரில் பயணம் செய்தனர். அதிவேகத்தில் காரை இயக்கிய ஓட்டுநர் முன்னால் சென்ற டிரக்கின் பின்புறத்தில் காரை மோதியதில் நடிகை ஷபானா ஆஸ்மி தலையிலும், முதுகுத் தண்டிலும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் டிரக் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் ஷபனா ஆஸ்மியின் கார் ஓட்டுநர் அமலேஷ் யோகேந்திர காமத் மீது அதி வேகத்தில் சென்று விபத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.