​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய பொதுமக்கள்

Published : Jan 18, 2020 4:26 PM

தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய பொதுமக்கள்

Jan 18, 2020 4:26 PM

திருச்சி அடுத்த திருவெறும்பூர் அருகே பொதுப்பாதையை அடைத்து கட்டப்பட்டதாகக் கூறப்படும் தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவரை அப்பகுதி பொதுமக்கள் இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியமங்கலம் காயிதேமில்லத் தெருவுக்கு அருகில், சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட தனியார் நிறுவனத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

இதனால் தங்கள் தெருவுக்குள் தண்ணீர் லாரி உள்ளிட்ட வாகனங்கள் வரமுடியவில்லை எனக் கூறி, அப்பகுதி மக்கள் சுவரை அகற்ற கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நிறுவனத்துக்கு சொந்தமான பகுதி வழியாக நடந்த வந்த இளைஞர் ஒருவரை, நிறுவனத்தினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுற்றுச்சுவரை இடித்த அப்பகுதி மக்கள், தனியார் நிறுவனத்திற்கு செல்லும் வாகனங்களை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.