​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் 2-ஆம் ஆண்டாக ஜல்லிக்கட்டு

Published : Jan 18, 2020 11:14 AM

ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் 2-ஆம் ஆண்டாக ஜல்லிக்கட்டு

Jan 18, 2020 11:14 AM

ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. 

ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட காளைகளும், 350க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி கே.சி.கருப்பணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். சிறப்பு பூஜைகளுக்குப் பின் காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக விடப்பட்டன. வாடிவாசலுக்கு வெளியே காத்திருந்த வீரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு காளைகளை பிடித்தனர்.

வீரர்களால் பிடிக்க முடியாமல் திமிறிக் கொண்டு வெளியேறிய காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக் கட்டுப் போட்டியின்போது காயமடைந்த 5க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.