​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
SSI படுகொலை.. அடுத்தடுத்து அரங்கேறும் கைதுகள்..!

Published : Jan 18, 2020 7:58 AM



SSI படுகொலை.. அடுத்தடுத்து அரங்கேறும் கைதுகள்..!

Jan 18, 2020 7:58 AM

ளியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் பயங்கரவாதி உட்பட மேலும் 4 பேரை கர்நாடகப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் வைத்து சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8 ஆம் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரேதப் பரிசோதனையில் அவர் உடலில் வெட்டுக்காயங்களும் இருந்தது கண்டறியப்பட்டது.

அவரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் மெகபூப் பாஷாவையும் கர்நாடகப் போலீசார் கைது செய்தனர்.

அவன் கொடுத்த தகவலின் பேரில் ஜெபியுல்லா , மன்சூர் கான், அஜ்மத்துல்லா ஆகிய மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். மெகபூப் பாஷா தலைமையில் அப்துல் ஷமீம், தவ்பீக் உட்பட 17 பேர் கொண்ட பயங்கரவாத அமைப்பு அங்கு செயல்பட்டு வந்ததும் அந்த அமைப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் தென்னிந்தியாவில் மிகப்பெரிய அளவில் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டியிருந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்த நால்வரையும் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக போலீசார் கர்நாடகா விரைந்துள்ளனர்.