​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லை திரையரங்கில்.. நடிகர் தனுஷுக்கு சிலை..!

Published : Jan 18, 2020 6:48 AM



நெல்லை திரையரங்கில்.. நடிகர் தனுஷுக்கு சிலை..!

Jan 18, 2020 6:48 AM

நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில் நடிகர் தனுஷுக்கு சிலை வைத்து அவரது ரசிகர்கள் மாலையிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

தெய்வங்களுக்கும், செயற்கரிய சாதனை செய்து மறைந்த தலைவர்களுக்கும் சிலை வைத்து மாலை அணிவித்து வணங்குவது மரபாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் முன்பு விஜய், அஜீத் ஆகியோருக்கு சிலை வைத்து கொண்டாடினர்.

அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் படம் வெளியாகும் நேரத்தில் சிலைவைத்தும், அதனை தூக்கிவந்து முத்தமிட்டும் அதகளப்படுத்தி வந்தனர்.

விஜய் ரசிகர்களோ விஜய்யை அய்யப்பசாமியாக கருதி தங்களுக்கு மாலை அணிந்து கொள்ளும் அளவிற்குச் சென்றனர்.

அந்த வரிசையில் நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றின் வாயிலில் பட்டாஸ் படத்தை பிரபலப்படுத்த நடிகர் தனுஷுக்கு ஃபைபர் சிலை ஒன்றை அவரது ரசிகர்கள் வடிவமைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

உயிரோடு இருக்கும் தங்கள் நாயகனுக்கு சிலை வைத்து அதற்கு மாலை அணிவிப்பது என்ன மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை என்று சிலையைக் கடந்து சென்ற சிலர் முணுமுணுத்தனர்.

அதேநேரத்தில் காய்ந்த மாலையுடன் கம்பீரமாக நிற்கும் இந்த சிலை மட்டுமல்ல, நடிகர்களுக்காக அவர்களின் ரசிகர்கள் வடிவமைக்கின்ற பெரும்பாலான சிலைகள் சம்பந்தப்பட்ட நடிகர்கள் போல இருப்பது இல்லை என்பதே கசப்பான உண்மை..!