​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்க பிரதமர் மோடி உத்தரவு...

Published : Jan 18, 2020 6:05 AM

அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்க பிரதமர் மோடி உத்தரவு...

Jan 18, 2020 6:05 AM

ஜம்முகாஷ்மீரில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வளர்ச்சித் திட்டங்களை, அங்குள்ள மக்களிடம் எடுத்துரைக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை ஜம்முகாஷ்மீர் மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக, மத்திய அமைச்சர்கள் 36 பேர், இன்று முதல் 23-ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்

இந்நிலையில், மத்திய அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜம்முகாஷ்மீர் மக்களுடன் மத்திய அமைச்சர்கள் கலந்துரையாட வேண்டும் என அறிவுறுத்தினார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள் குறித்து காஷ்மீர் மக்களிடம் எடுத்துரைக்குமாறும், நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புற மக்களையும் சந்திக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதன்படி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, நாளை ரியாஸி மாவட்டத்துக்கும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஸ்ரீநகருக்கும் செல்கின்றனர். உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி, 22-ஆம் தேதி கந்தர்பால் மாவட்டத்திற்கும், சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாரமுல்லா மாவட்டத்துக்கும் செல்கின்றனர்.

36 அமைச்சர்களும் காஷ்மீர் செல்வதற்கான பணிகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஒருங்கிணைத்துள்ளது.