​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..!

Published : Jan 17, 2020 9:41 PM

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..!

Jan 17, 2020 9:41 PM

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஷிகர் தவான் 96 ரன்களும், ரோஹித் சர்மா 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கேப்டன் கோலி 78 ரன்களும், ராகுல் 80 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ஸ்டீவன் ஸ்மித் அதிகபட்சமாக 98 ரன்களைக் குவித்தார்.

இதன் மூலம் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.