​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை விமான நிலையத்தில், கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

Published : Jan 17, 2020 7:14 PM

சென்னை விமான நிலையத்தில், கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

Jan 17, 2020 7:14 PM

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்புவில் இருந்து விமானத்தில் வந்த சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 8 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பசை வடிவிலும், நகையாகவும் அவர்கள் கடத்தி வந்த ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு பயணியிடம் இருந்து 10 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல் தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக சுங்கத்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.