​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 4 பேருக்கு ரஷ்யாவில் பயிற்சி

Published : Jan 17, 2020 6:20 PM



ககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 4 பேருக்கு ரஷ்யாவில் பயிற்சி

Jan 17, 2020 6:20 PM

ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல தேர்வான 4 பேருக்கு ரஷியாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் விடுத்துள்ள அறிக்கையில், தேர்வுக்கு பிறகு, 4 விண்வெளி வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

அவர்களுக்கு ரஷியாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இம்மாதம் 3-வது வாரத்தில் பயிற்சி தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

11 மாத பயிற்சி முடிந்து திரும்பிய பிறகு, இந்தியாவிலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும்,விண்கலத்தை எப்படி இயக்குவது? எப்படி பணியாற்றுவது? உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.