​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வரும் 20-ஆம் தேதி 2000 மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

Published : Jan 17, 2020 6:07 PM

வரும் 20-ஆம் தேதி 2000 மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

Jan 17, 2020 6:07 PM

நாடு முழுவதும் இருந்து தேர்வு பெற்றுள்ள 2000 மாணவர்களுடன் பிரதமர் மோடி 20 ஆம் தேதி கலந்துரையாடுகிறார்.

பள்ளி மாணவர்களுக்கு வரும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் முழு ஆண்டு தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதமர் மோடி, மாணவர்களை சந்தித்து அறிவுரைகளை கூறி வருகிறார்.

அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கத்தில் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் முதன்முறையாக 50 மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.