​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..

Published : Jan 17, 2020 5:21 PM

காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..

Jan 17, 2020 5:21 PM

திருமணமான 4 மாதத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்தேரியை சேர்ந்த பழனிவேல் என்பவர், ராஜேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ராஜேஸ்வரி கர்ப்பம் அடைந்த நிலையில் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை கணவர் வீட்டார் கவனித்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ராஜேஸ்வரியை அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவரது இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து சேலம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு 3 நாட்கள் கடந்து விட்ட நிலையில், ஆர்.டி.ஓ அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.