​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பீகாரில் நிதீஷ்குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம் -பாஜக தலைவர் அமித்ஷா

Published : Jan 17, 2020 4:59 PM



பீகாரில் நிதீஷ்குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம் -பாஜக தலைவர் அமித்ஷா

Jan 17, 2020 4:59 PM

பீகாரில் நிதீஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்ற அறிவிப்பின் மூலம், பாஜக தலைவர் அமித்ஷா ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளார்.

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், நிதீஷ்குமார் தலைமையிலேயே ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி தேர்தலை சந்திக்க உள்ளதாக அமித்ஷா நேற்று அறிவித்தார்.

விரைவில் பாஜக தலைமைப் பொறுப்பை ஜே.பி.நட்டாவிடம் ஒப்படைக்க உள்ள நிலையிலும், ஆந்திராவில் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையிலும், அமித்ஷா இந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரும் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் பாஜகவினர் மத்தியில் உள்ளது.

அந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அமித்ஷா, கூட்டணியில் பாஜக நம்பிக்கை வைத்துள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருப்பதன் மூலம் ஐக்கிய ஜனதா தளத்தின் சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.